திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற ஔவை பிராட்டியின் அறிவுரைகிணங்க, நமது தமிழ்கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மறவாமல் பெரியவர் முதல் மற்றும் சின்னஞ் சிறுவர்கள், குழந்தைகள் இந்த கானா மண்ணில் தொடர்ந்து கடைபிடித்து அனைத்து தமிழர்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியாக “கானா தமிழ்ச்சங்கம்” அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கானா தமிழ்ச்சங்கத்தின் பார்வை தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனார் பாரம்பரிய மிக்க புறநானூறில் மூன்றாயிரம் (3000) வருடங்களுக்கு முன்பு எழுதியுள்ள "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதை நினைவில் கொண்டு தேசியம்,மதம்,சாதி என்கிற பாகுபாடுயில்லாமல் வழிநடத்தி வருகிறோம்.
ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்ற நியதிற்கிணங்க, கானா தமிழ்ச்சங்கத்தை திறமையாக அணி அமைத்து உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக பொங்கல் திருவிழா, தமிழ் வருட பிறப்பு, தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.